அக்டோபர் 15 முதல் 25 வரை காங்கிரஸ் போராட்டம்! மிக மோசமாகி வருகிறது பொருளாதாரம் மன்மோகன் சிங் பேச்சு!

13 September 2019 அரசியல்
manmohansinghlatest.jpg

இந்தியாவின் பொருளாதாரம் மோசாமான நிலையில் இருந்து, மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது என, முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு.மன்மோகன் சிங் கவலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் கவலைக்கிடமாக உள்ளது. ஆட்டோமொபைல் துறை, விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தித் தொழில்கள் மிக மோசமாகி வருகின்றன. போகும் போக்கைப் பார்த்தால், அந்தத் துறையைச் சேர்ந்த பலரும் வேலை வாய்ப்பினை இழக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதற்கு மத்திய அரசு உடனடியாக, ஒரு நல்ல முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி, கட்சித் தலைவர்களை ஒவ்வொருவராக அழைத்துப் பேசினார். அதற்குப் பின், வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் 25 வரை, இந்தியாவின் முக்கிய நகரங்களில், போராட்டம் நடத்த உள்ளதாக கூறியுள்ளார். பாஜகவின் போலி வாக்குறுதிகளைப் பற்றியும், பொருளாதாரம் குறித்து, சாலையில் இறங்கிப் போராட உள்ளதாக, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்து, காங்கிரஸ் மாபெரும் போராட்டம் நடத்தியது. இருப்பினும், இந்த போராட்டம் மாபெரும் தோல்வியில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS