15 கோடியில் அருங்காட்சியகம்! அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

28 September 2019 அரசியல்
mafoipandiyarajan.jpg

கீழடியில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிகள் முடிந்த பின், அங்கு தமிழக அரசின் சார்பில், சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில், கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

இது குறித்து, நேற்று கீழடியில் ஆய்வின் பொழுது பேசிய அமைச்சர் கூறுகையில், கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே சிலிக்கான் மணல் இருந்துள்ளது. அப்பகுதியில் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியே ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வு வரும் 30ம் தேதியுடன் முடிவடைய வேண்டியுள்ள நிலையில், மேலும் 2 வராங்களுக்கு ஆராய்ச்சிப் பணிகள் தொடர அனுமதித் தரப்பட்டுள்ளன.

அடுத்த நடைபெற உள்ள, 6வது கட்ட ஆராய்ச்சியின் பொழுது, மத்திய தொல்லியல் துறையுடன், தமிழக அகழ்வாய்வுத் துறையும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. இந்த ஆராய்ச்சியினாது, தமிழகத்தின் கீழடியில் மட்டுமில்லாமல், மணலூர், அகரம், கொந்தகை உட்பட பல பகுதிகளிலும் நடைபெற உள்ளது எனவும் கூறினார். அதற்கு மத்திய அரசிடம் அனுமதியும் கேட்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நடைபெறும் ஆராய்ச்சியானது, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா செட்டியார் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹார்ட்வேர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தான் செய்து வருகின்றோம் எனக் கூறினார். அவருடன் கைத்தறி அமைச்சர் திரு. பாஸ்கரன் உடனிருந்தார்.

நேற்று கீழடியில், திமுக தலைவர் திரு. முகஸ்டாலினும், ஆய்வு செய்தார். அப்பொழுது, செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடியில் விரைவில், அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

HOT NEWS