நிலா உருவானதே, பூமிக்கு நீர் கொண்டு வரத் தான்! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

22 May 2019 டெக்னாலஜி
water-in-moon.jpg

4.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாகவே, நிலா மற்றும் பூமி ஆகியவை உருவாகியுள்ளன என, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் மட்டுமே நம் சூரியக் குடும்பத்தில், அதிக அளவிலான நீரினைக் கொண்டுள்ளது.

பூமியானது தியா என்ற கோளுடன் மோதிய பொழுது, நிலா உருவாகியிருக்க வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், புவியானது, தற்பொழுது உள்ளது போல் இருந்திருக்காது எனவும், தியாவிலும் அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கருதுகின்றனர்.

இரண்டு கிரகங்களும் மோதிய பொழுது, அதீத வெப்பம் உருவாகியிருக்கும் எனவும், அப்படி உருவான வெப்பம் நாளடைவில், சிறு சிறு பாறைகளை உருவாக்கியிருக்கும் எனவும் கருதுகின்றனர்.

ஆனால், எப்படி, நெருப்பாக இருந்த கிரகத்தில் நீர் உருவானது எனவும், பின்னர், புவி முழுவதும் எப்படி நீர் சூழ்ந்துள்ளது எனவும் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், நிலாவில் இருந்து தான் அத்தகைய மூலக்கூறுகள் புவிக்கு வந்திருக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. அப்படி, வந்த மூலக்கூறுகளில் இருந்து தான், புவியில் நீர் உற்பத்தியாகி உள்ளது, என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதுப் பற்றிய, ஆராய்ச்சியில், தற்பொழுது விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

HOT NEWS