கொலையுதிர் காலம் திரைவிமர்சனம்!

20 August 2019 சினிமா
kolayuthirkaalam.jpg

ரேட்டிங் 2/5

நெட்பிளிக்ஸ் சேனலில் மர்டர் மிஸ்டரி என்ற திரைப்படம், இந்த ஆண்டு வெளியானது. இப்படத்தைப் பார்த்தவர்கள், கொலையுதிர் காலத்தைப் பார்க்கத் தேவையில்லை. ஒரே ஒரு வேற்றுமை. அது காமெடி திரைப்படம். இது திரில்லர் திரைப்படம் எனக் கூறுகிறார்கள்.

பில்லா-2, உன்னைப் போல் ஒருவன் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சக்ரி டோலட்டி. அவர் தான், இந்த கொலையுதிர் காலம் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இவர் எப்பொழுதும், ஒரு ஹாலிவுட் படத்தின் தாக்கத்தாலோ அல்லது வீடியோ கேம்களின் தாக்கத்தை மையமாகக் கொண்டோ, படம் உருவாக்குபவர். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படத்தையும் ஏதோ, ஒரு ஹாலிவுட் படத்தினை பார்த்து உருவாக்கி உள்ளார் எனத் தெரிகிறது.

இங்கிலாந்தில் உள்ள ஒரு பெரும் பணக்காரி, தன்னுடைய சொத்தினை நயன்தாரவின் பெயரில் எழுதி வைத்துவிடுகிறார். இதனால், அவரை ஒருவர் கொலை செய்ய துரத்துகிறார். அவரிடம் இருந்து தப்பித்தாரா? இவரைக் கொலை செய்ய துரத்தும் மர்ம மனிதர் யார்? என்பது தான் படத்தின் கதை. திரில்லர் படங்களின் மிகப் பெரிய பலமே இசை தான். இந்தப் படத்தில் அது கிடையாது. எதையோ செய்துள்ளார்கள்.

பொதுவாக, இருட்டாக காண்பித்து, பார்வையாளர்களைப் பயமுறுத்துவது என்பது ஆதி காலத்து ஸ்டைல். இப்பல்லாம் பகலிலேயே படங்களில் பேய் வர ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், இன்னும் இருட்டை நம்பி மட்டுமே படத்தை நகர்த்தியுள்ளனர். நயன்தாரா நடிப்பிற்கு மட்டுமல்ல, வசனங்களை உச்சரிக்கும் பொழுது, அவர் கொடுக்கும் முக பாவணைகள் நம்மை அவருடன் அந்தப் படத்தில் பயணம் செய்யவைப்பவை. இது அவருடைய மறைமுக பலம் ஆகும்.

இந்தப் படத்தில் அதற்கும் ஆப்பு வைத்துவிட்டார் இயக்குநர். இந்தப் படத்தில், நயன்தாராவால், வாய் பேசவோ, கேட்கவோ முடியாது. இதனால், அவருடைய முழு பலமும் அவருடைய நடிப்பினை நம்பி மட்டுமே இருந்தது. ஏற்கனவேப் பல திரைப்படங்கள் இந்த மாதிரி வந்துவிட்டன. எனவே, இந்தப் படத்தில் அவர் முக்கினாலும், அவர் நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைக்காது.

இந்தப் படத்தில் உள்ள ஒரே ஆறுதலான விஷயம், இந்தப் படம் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் முடிவது மட்டும் தான். மொத்தத்தில் கொலையுதிர் காலம் நயன்தாரா பாவம்.

HOT NEWS