கோச்சைத் தேர்ந்தெடுப்பது ஒன்னும் அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல!

04 August 2019 விளையாட்டு
kapildev.jpg

இந்திய அணிக்கான பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதென்பது அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல என, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் கபில் தேவ் கூறியுள்ளார்...

அவர் தலைமையில், இந்திய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் ஆலோசனை அமைப்பை உருவாக்கியுள்ளது. மூன்று பேர் உள்ள அமைப்பில், கபில்தேவ் தலைமையில், அன்சூமான் கெய்க்வாட் மற்றும் சாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுவரை 2,000க்கும் மேற்ப்பட்ட விண்ணப்பங்கள், இந்திய பயிற்சியாளர் பதவிக்காக வந்துள்ளதாக அவர் தெரிவித்துளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்திய அணிக்கான தரமான பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதென்பது அவ்வளவு கஷ்டமான விஷயம் அல்ல. ஆனால், அந்தப் பயிற்சியாளர் அனைத்து கிரிக்கெட் வீரரையும் அரவணைத்துச் செல்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவருக்காகத் தான் இந்திய கிரிக்கெட் அணிக் காத்துக் கொண்டு இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

HOT NEWS