கே13 திரை விமர்சனம்!

05 May 2019 சினிமா
k13.jpg

ரேட்டிங் 2.7/5

பரத் நீலகண்டன் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில், எஸ்பி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கே13.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகியாக நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். உதவி இயக்குநராக இருக்கும் அருள்நிதிக்கு, கிடைத்த இயக்குநராகும் வாய்ப்பும் பறிபோய்விடுகிறது. புதிய கதையை உருவாக்கி வாருங்கள் என சொல்லவும் கொஞ்சம் நிம்மதி அடைகிறார்.

நண்பர்களுடன் கிளப்புக்கு சென்று, நன்றாக குடிக்கிறார். அங்கு, ஷ்ரத்தாவுடன் பழக்கம் ஏற்படுகிறது. போதையில் இருவரும் வீட்டிற்குச் செல்கின்றனர். பின்னர் என்ன நடக்கிறது. எதற்காக, அருள்நிதியை நாற்காலியில், கட்டிப் போட்டிருக்கின்றனர். ஷ்ரத்தா ஏன் இறந்து கிடக்கிறார். என்ன நடக்கிறது. எப்படி அருள்நிதி தப்பிக்கிறார் என்பது தான் மீதி கதை.

அருள்நிதி இந்த கே 13 படத்தையே தாங்கிப்பிடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும், அந்த அளவிற்கு, இந்தப் படத்தில், தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் பிண்ணனி இசை நன்றாக உள்ளது. படத்தின் மிகப் பெரிய பலமே, படத்தின் திரைக்கதை தான். அந்த அளவிற்கு, மிக சுவாரஸ்யமாக படத்தினை எடுத்துள்ளனர்.

HOT NEWS