இருட்டு திரைவிமர்சனம்!

13 December 2019 சினிமா
iruttureview.jpg

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சுந்தர் சி நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் இருட்டு. இது ஒரு பேய் படம். வெற்றிப் படங்களை மட்டுமே இயக்குநராக தந்து வந்த சுந்தர் சி, நடிகராகப் பலத் தோல்விப் படங்களையும் தந்து இருக்கின்றார். ஆனால், இருட்டுத் திரைப்படம் தோல்வித் திரைப்படம் அல்ல. பலப் பேய் படங்கள் வந்திருந்தாலும், இந்தப் பேய் படம் சற்றுத் தனித்துவமானது.

தமிழ் சினிமாவில் பொதுவாகப் பேய் படம் என்றாலே, அது இந்து மத அடிப்படையில் தான் உருவாக்கப்படும். எலுமிச்சை பழம், நடிகையின் உடலுக்குள் புகும் ஆன்மா, சாமிப் பாட்டு, பூஜை, கடைசியில் வெற்றி என அனைத்துப் பேய் படங்களுமே இப்படியான ஒரு சக்கரத்திற்குள் சிக்கியவை தான். நயன்தாரா நடித்த, மாயா போன்ற ஒரு சிலத் திரைப்படங்களே விதிவிலக்கு என்று கூறலாம். அவ்வாறு, இந்த இருட்டுத் திரைப்படமும் ஒரு விதிவிலக்கான திரைப்படம் தான்.

நீங்கள் யூடியூப் பயன்படுத்துவீர்கள் என்றால், உடனடியாக சிசின் (siccin) என டைப் செய்யுங்கள். உங்களுக்கு வரிசையாக ஒரு ஐந்துப் படங்கள் வரும். அதனைப் பாருங்கள். கண்டிப்பாக கூற முடியும், உங்களால் பயப்படாமல் இருக்க முடியாது என்று. அந்த அளவிற்கு மிகக் கொடூரமாகவும், அதே சமயம் மந்தீரிகத்தை நம்புபவர்களால் அந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள விஷயங்கள் உண்மையானவை எனவும் பேசப்படும் திரைப்படம் அது. இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில், பேய் படமாக அது உருவாக்கப்பட்டு இருக்கும். (ஒரு சிறு குறிப்பு அந்தப் படத்தில் வரும் பின்னணி இசை தான் விஸ்வரூபம் படத்தின் பின்னணி இசையும்)

அப்படித் தான் இந்த இருட்டுப் படமும் உருவாக்கப்பட்டு உள்ளது. முற்றிலும், இஸ்லாமிய மத அடிப்படையில், பேய்கள் அதனை விரட்ட முயற்சிக்கும் நாயகன் நடந்தது என்ன? அடுத்து என்ன நடக்கும் இது தான் இருட்டுத் திரைப்படம். இஸ்லாமிய சூன்யக்காரிகளை ஒரு இடத்தில் கொல்கின்றனர். இதனால், அவர்கள் ஆவிகளாக வந்து மக்களைத் துன்புறுத்துகின்றனர். அவைகளால் ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி விசாரிக்க வரும் போலீசாக சுந்தர் சி. அவருடன் அவருடைய அழகான மனைவி மற்றும் மகள். பேயினை விரட்டினாரா? அல்லது தன்னுடைய குடும்பத்தினை அந்தப் பேய்களுக்கு பலி கொடுத்தாரா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

படத்தினை எப்படி இயக்குநர் எடுக்க முயற்சித்தாரோ, அப்படியே உருவாக்கியும் காட்டியிருக்கின்றார் என்பது மட்டும், படத்தினைப் பார்த்தால் தெரிகின்றது. பூச்சிகள், பாம்புகள் போன்ற கிராபிக்ஸ் காட்சிகளில் சற்று மெனக்கெட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நல்லக் கதை, அருமையான திரைக்கதை. கச்சிதமான நடிகர் மற்றும் நடிகையர் தேர்வு. புதுவிதமான கதைக் களம், நேர்த்தியானப் பின்னணி இசை என, இருட்டு மிரட்டுகின்றது.

மொத்தத்தில் இருட்டு ரசிகர்களை மிரட்டும்.

ரேட்டிங் 3

HOT NEWS