ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு! சோகத்தில் ரசிகர்கள்!

12 March 2020 விளையாட்டு
dhonipractice.jpg

இந்தியாவின் முக்கியமான விளையாட்டுப் போட்டித் தொடர்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இந்த ஆண்டுத் தொடரானது, கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுக்க, சீனாவில் இருந்து உருவான கொரோனா வைரஸானது, 110க்கும் அதிகமான நாடுகளில் பரவி வருகின்றது. இதனால், உலக வர்த்தகமும், பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. சர்வதேச அளவில் பல நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள், விளையாட்டுத் தொடர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள, ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று ஐபிஎல் போட்டிகளை நடத்தும் நிர்வாகத்தின் தலைமையில், கூட்டம் நடைபெற்றது. அதில், கிரிக்கெட் விளையாடும் அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பலத்த யோசனைகளுக்கும், பேச்சுவார்த்தைக்கும் பிறகு, தற்பொழுது ஐபிஎல் போட்டியினை, ஏப்ரல் 15ம் தேதி வரை, தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

HOT NEWS