வெள்ளை மாளிகையைப் பற்றி யாருக்கும் தெரியாத இரகசியங்கள்!

13 February 2020 தொழில்நுட்பம்
white-house11.jpg

அமெரிக்காவினைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். தொழில்நுட்பம், சினிமா, வியாபாரம் மற்றும் இராணுவ பலத்தின் மூலம், உலகின் அனைத்து நாடுகள் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு வல்லரசு நாடு.

அந்த நாட்டின் அதிபர் இருப்பது, ஒயிட் ஹவுஸ் என அழைக்கப்படும் வெள்ளை மாளிகையில் தான். இந்த மாளிகைக்கு என, ஒரு சில வரலாற்று மரியாதைகளும், இரகசியங்களும் உள்ளன. அமெரிக்க அதிபர்கள் பலர் மாறியிருக்கின்றனர். இருப்பினும், அவர்கள் வசிக்கும் இந்த வெள்ளை மாளிகையினை மட்டும் மாற்றுவது கிடையாது. அப்படி இதில் என்ன தான் இருக்கின்றது என கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

இரண்டு நூற்றாண்டு

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, அமெரிக்க அதிபரின் வசிப்பிடமாக இந்த வெள்ளை மாளிகை உள்ளது. இங்கு தான் பல அமெரிக்க அதிபர்கள் வாழ்ந்துள்ளனர். இந்த மாளிகையானது, உலகினை ஆளும் அதிகார மையத்தின் முத்திரையாகவே பலராலும் பார்க்கப்படுகின்றது. 1792 அக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமான பணியானது, 1800களில் கட்டி முடிக்கப்பட்டது. இதில் முதன் முதலில் குடியேறியவர் என்றப் பெருமையினை, அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்ஸ்ம் அவருடைய மனைவி அபிகெயிலும் பெற்றனர். இந்த கட்டிடத்தினை, அதிபர் வாஷிங்டண் தான் கட்ட ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டிடம்

இந்த கட்டிடம் வெளியில் இருந்து பார்க்க, சாதாரண கட்டிடமாக இருந்தாலும், இதில் இல்லாத வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் வேறு எந்தக் கட்டிடத்திலும் கிடையாது. 1814ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரானப் போரீல் முதன் முதலாக இந்த மாளிகை தீக்கிரையானது. பின்னர், 1929ம் ஆண்டும் தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, தற்பொழுது அதிநவீன தொழில்நுட்பங்களும், பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

இந்த கட்டிடத்தில், சுமார் 132 அறைகள், 35 பாத்ரூம்கள் உள்ளன. ஆறு அடுக்கு மாளிகையாக இது உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் மொத்தமாக, 412 கதவுகளும், 147 ஜன்னல்களும், 28 தீயணைக்கும் கருவிகளும், 8 மாடிப் பாதைகளும், 3 எலிவேட்டர்களும் உள்ளன. இந்த கட்டிடத்திற்கு 570 கேலன் அளவுள்ள பெயிண்டானது அடிக்கப்படும். இந்த கட்டிடத்தில், ஜாகிங் செல்லும் பாதைகள், நீச்சல் குளம், திரையறங்கம், டென்னிஸ் கோர்ட் உள்ளிட்ட பலவித வசதிகள் உள்ளன.

தற்போதைய மதிப்பின் படி, இந்த வெள்ளை மாளிகையானது 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மத்திப்புடையது என, கணிக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டியவர், ஒரு அமெரிக்கர் அல்ல என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும். இந்தக் கட்டிடத்தினைப் பராமரிக்க, ஆண்டுக்கு 7,50,000 முதல் 16,00,000 அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகின்றது.

சமையல்

அதிபர் இருக்கும் இடத்தில் பணியாட்களுக்கு மட்டுமல்ல, விருந்தினர்களுக்கும் சமைக்க வேண்டி இருக்கும் அல்லவா, அதற்காகவே பிரத்யேகமாக இங்கு சமையல் கூடம் உள்ளது. இந்த சமையல் கூடத்தில், 24 மணி நேரமும் ஆட்கள் பணி செய்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 1000 பேருக்கு உணவளிக்கு வசதியானது, இந்த வெள்ளை மாளிகை சமையல் அறைக்கு உள்ளது. பலவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டாலும், கடுமையான சோதனைக்குப் பிறகே, பரிமாறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றது. அதிபருக்கு என்ன பிடிக்கும், அவருடைய உடல்நலத்திற்கு எது நல்லது உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும், தலைமை சமையல் கலைஞருக்குத் தெரியும்.

அமெரிக்க வரலாற்றில், இந்த கட்டிடத்திற்கு என, பிரேத்யேக அதிகாரப்பூர்வமான பெயர் கிடையாது. காலத்திற்கேற்றாற் போல, பெயர் மாற்றபட்டுள்ளது. 1901ம் ஆண்டு இதனை எக்ஸ்ஈக்யூட்டிவ் ரெசிடென்ஸ் என அழைத்தனர்.

இலவசம் ஆனால் பணம் செலுத்த வேண்டும்

இந்த மாளிகையில் தங்குவதற்கு பணம் கட்டத் தேவையில்லை. முற்றிலும் இலவசம். ஆனால், உள்ளே உள்ள வசதிகளைப் பராமரிக்க பணம் செலுத்த வேண்டி உள்ளது. இது, அமெரிக்க அதிபர்களுக்கும் விதிவிலக்கு கிடையாது. அவர்கள் இங்கு இலவசமாக தங்கிக் கொள்ளலாம். ஆனால், உள்ளே உள்ள சமையல் வசதி முதல் பலவற்றிற்கும் பணம் செலுத்த வேண்டும். பில்கிளிண்டன் உட்பட பலரும், பணம் செலுத்த இயலாமல், கடனாளியாகி, இந்த மாளிகையை விட்டு, அதிபராக இருக்கும் பொழுதே வெளியேறி உள்ளனர்.

கல்லறை

இந்த வெள்ளை மாளிகையில் கல்லறையும் உள்ளது. இங்குப் பலரும் மரணமடைந்துள்ளனர். மொத்தமாக, அதிகாரப்பூர்வத் தகவலின் படி, 10 பேர் இந்த மாளிகையில் இறந்துள்ளனர். இதனால், இங்கு அதிபர்களின் மனைவிகளாக இருந்த லெட்டியா டெய்லர், கரோலின் ஹாரிசன் மற்றும் எலன் வில்சன் உள்ளிட்டோர் மரணமடைந்துள்ளனர்.

பேய் இருக்கு!

இந்த வெள்ளை மாளிகையிலும், அவ்வப்பொழுது தற்செயலாக பொருட்கள் கீழே விழுந்து உடைந்துள்ளனவாம். இந்த சம்பவங்கள், அங்குள்ள கேமிராக்களில் பதிவாகி உள்ளன. மேலும், இந்த கட்டிடத்தில் பேய் இருப்பதாகவும், ஒரு சிலர் நம்புகின்றனர்.

வெள்ளை மாளிகை 2.0

தற்பொழுது இருப்பது இரண்டாவது வெள்ளை மாளிகை ஆகும். 1814ம் ஆண்டு நடைபெற்ற போரில், இங்கிலாந்து இராணுவம், இந்த மாளிகையை எரித்தது. இதனையடுத்து, இதனை முதலில் உருவாக்கிய ஜேம்ஸ் ஹோபனே, மீண்டும் உருவாக்க வேண்டும் என ஆணையிடப்பட்டது. அதனையொட்டி, 1817ம் ஆண்டு, இரண்டாவதாகப் புதுப்பிக்கப்பட்டது.

சிறப்பான திருமண மண்டபம்

இதனைக் கேட்கும் பொழுது, உங்களுக்கு சிரிப்பு வரலாம். ஆனால், இங்கு 18 திருமணங்கள் தற்பொழுது வரை நடைபெற்று உள்ளன. கடைசியாக, 2013ம் ஆண்டு இங்கு திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த அளவிற்கு, இது காதலர்களின் கூடரமாகவும் இருந்துள்ளது.

இரகசிய வழிகள்!

அதிபர் இருக்கும் இடம் என்றால், பல இரகசிய வழிகள் இருக்காதா என்ன? வெள்ளை மாளிகையில் பல இரகசிய வழிகள் உள்ளன. இங்கிருந்து பெண்டகன் இராணுவ தளத்திற்கு மிகப் பாதுகாப்பாக செல்லும் வழிகளும் உள்ளன. அதே போல், பிரச்சனை என்றால் இந்த மாளிகையில் இருந்து, வெளியேறுவதற்கும் வசதிகள் உள்ளன.

வாரிசு வேலை

நம் நாட்டில், வாரிசு அரசியல் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு, பலரும் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அதுவேப் பின்பற்றப்படுகின்றது. அங்கு, இருக்கும் வேலைக்கு வெளியில் இருந்து ஆட்கள் அழைக்கப்படுவதில்லை. மாறாக, அங்கு வேலை செய்பவர்களின் உறவுகள் மற்றும் வாரிசுகளே சிபாரிசின் அடிப்படையில், வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

HOT NEWS