இன்ஸ்டாகிராமின் புதிய பாலிசி! ஐடிகளை இழந்த பாலியல் நடிகைகள்!

27 November 2019 தொழில்நுட்பம்
instagram.jpg

உலகளவில் டிஜிட்டல் வலைதளங்களில், பல ஆபாச விஷயங்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இதனால், அவைகளைக் கட்டுப்படுத்தும் விதத்தில், பலவிதமான கட்டுப்பாடுகளை தொடர்ந்து பல நாட்டு அரசாங்கங்களும் விதித்து வருகின்றன.

அவ்வகையில், தற்பொழுது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி, ஆபாச வீடியோக்கள், ஆபாச படங்கள், செல்பிகள் உட்பட எதையும் அப்லோட் செய்யக் கூடாது. அப்படி அப்லோட் செய்தால், அவை நீக்கப்பட உள்ளன. இதன் காரணமாக, பாலியல் குற்றங்களை இணையத்தில் தடுக்க முடியும், என்று நம்புகின்றன இந்நிறுவனங்கள்.

இதனை முன்னிட்டு, சுமார், 1500 ஆபாச நடிகைகளின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது குறித்து கவலைத் தெரிவித்துள்ள அந்த நடிகைகள், தாங்கள் எந்தவித ஆபாச வீடியோவினையோ அல்லது போட்டோவினையோ பதிவேற்றம் செய்யவில்லை எனவும், ஆனாலும் எங்கள் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமினை பயன்படுத்துவோர் கண்டிப்பாக, 13 வயதுக்கும் குறையாமல் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது பேஸ்புக்.

HOT NEWS