டிக்டாக்கில் கழியும் இந்தியர்களின் காலம்! எவ்வளவு நேரம் செலவு செய்கின்றார்கள் தெரியுமா?

04 February 2020 அரசியல்
tiktok.jpg

இந்தியர்கள் டிக்டாக்கில் செலவிட்டுள்ள நேரமானது, தோராயமாக கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் டிக்டாக்கினைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. உலகளவில் இந்த ஸ்மார்போன் ஆப்பினை, சீனாவிற்கு அடுத்து, இந்தியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இதில், தங்களுடையத் திறமையைக் காட்டுவதாகக் கூறி, பாடல்கள், நடனங்கள், நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். எப்படியாவது, லைக்குகள், புதிய ஃபாலோவர்களைப் பெற வேண்டும் என்பதற்காக, நிறைய ஆபாசப் பதிவுகளையும், வீடியோக்களையும் வெளியிடுகின்றனர்.

இதனால், பலரின் விமர்சனத்திற்கும் ஆளாகி வருகின்றனர். ஒரு சில விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் ஆண் மற்றும் பெண்களும், இதில் வீடியோக்களைப் பதிவிட்டு மக்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்கையில், ஆப் ஆனி என்ற நிறுவனம், டிக்டாக் உள்ளிட்ட ஆன்ட்ராய்டு ஆப்களைப் பயன்படுத்துவோர் பற்றி, சர்வே ஒன்றினை நடத்தியது.

அதில், பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி உள்ளன. ஆம், இந்த ஆப்பில், இந்தியர்கள் சுமார் 550 கோடி மணி நேரத்தினை செலவிட்டு உள்ளனர். இது ஏறக்குறைய, ஆறு லட்சத்து 27 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இவ்வளவு நேரத்தினை செலவிட்டுள்ள ஒரே நாடு என்றால், அது இந்தியா மட்டுமே. குறுகிய காலத்தில், மக்களிடம் பிரபலமாகிவிடும் எண்ணத்தில் இவ்வாறு செய்வதால், இதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தும் உள்ளது.

அதே போல், பேஸ்புக்கினைக் காட்டிலும், இந்த டிக்டாக் ஆப்பினை பயன்படுத்தும் அளவும் அதிகரித்துள்ளது. இதனை அந்த ஆப் ஆனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக, தன்னுடைய ஆய்வு சர்வேயில் தெரிவித்துள்ளது.

HOT NEWS