இனி இந்திய கிரிக்கெட் அணியின் நிறமும் காவி! எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!

29 June 2019 விளையாட்டு
ind-vs-sl.jpg

இதுவரை நீலநிறத்தில் இருந்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின், ஜெர்சி தற்பொழுது காவி நிறத்திற்கு மாறியுள்ளது. இதனை நேற்று அதிகாரப்பூர்வமாக, அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இந்திய அணிக்கு புதிதாக, கிரிக்கெட் ஜெர்சி அறிமுகம் ஆக உள்ளதாக, ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை பிசிசிஐ தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், புதிய ஜெர்சியின் மாதிரியை வெளியிட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில், ஆதரவும், எதிர்ப்பும் கலந்தே இருக்கின்றது.

இந்த ஜெர்சி முற்றிலும் காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெர்சியை நம் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துடன் நடக்க உள்ள கிரிக்கெட் போட்டியில், அணிந்து விளையாட உள்ளதாகவும், பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், இந்த ஜெர்சியை வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் மட்டுமே பயன்படுத்த உள்ளதாகவும், அறிவித்துள்ளது பிசிசிஐ.

HOT NEWS