இந்தியா அபார வெற்றி! இந்திய வீரர்கள் அசத்தல் ஆட்டம்!

19 December 2019 விளையாட்டு
indvswi2ndodi.jpg

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. நேற்று விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற வெ.இண்டீஸ் அணி பந்து வீச்சினைத் தேர்வு செய்தது.

இதனையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் வீரர் ரோகித் ஷர்மா 138 பந்துகளில் 17 பவுண்டரி, 5 சிக்சர் உட்பட 159 ரன்கள் குவித்து அசத்தினார். லோகேஷ் ராகுல் 104 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 102 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 0 (1), ஷ்ரேயஸ் ஐயர் 53(32), ரிஷாப் பண்ட் 39 (16), கேதர் ஜாதவ் 16 (10) ரன்கள் எடுத்தனர்.

வெ.இண்டீஸ் தரப்பில், காட்ரல் இரண்டு விக்கெட்டுகளையும், கீமோ பவுல், ஜோசப் மற்றும் பொலார்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெ.இண்டீஸ் அணி களமிறங்கியது.

அந்த அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழுந்து, 280 ரன்களை குவித்தது. எல்வின் லீவிஸ் 30(35), ஹோப் 78(85), ஹெட்மயர் 4(7), சேஸ் 4(9), பூரான் 75(47), பொலார்ட் 0(1), ஹோல்டர் 11(13), பவுல் 46(42), ஜோசப் 0(1), ப்பெர்ரே 21(18) ரன்கள் எடுத்தனர். இதனால், வெ.இண்டீஸ் அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியினைத் தழுவியது.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி வீரர்கள் சமி மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளும், ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளும், தாக்கூர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், வெ.இண்டீஸ் மற்றும் இந்திய அணி இரண்டுமே தலா ஒரு போட்டியில் வென்றுள்ளது.

HOT NEWS