இரண்டாவது டி20 இந்தியா அபார வெற்றி! டி20 தொடரை கைப்பற்றியது!

05 August 2019 விளையாட்டு
ind-vs-sl.jpg

pic courtesy:icc

நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இந்தியாவம்-மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. ரோகித் ஷர்மா 51 பந்துகளில், 6 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 67 ரன்கள் சேர்த்தார். தவான் 23, கோலி 28, பண்ட் 4, பாண்டே 6, பாண்ட்யா 20 மற்றும் ஜடேஜா 9 ரன்கள் சேர்த்தனர்.

மேற்கு இந்திய தீவுகள் சார்பில், தாமஸ் மற்றும் காட்ரல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், கீமோ பால் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் வீரர்கள் தொடக்கம் முதலே சொதப்பினர். நரைன் 4, லீவிஸ் 0, பூரான் 19 ரன்கள் எடுத்தனர். பவுல் 34 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர் அடித்து, 54 ரன்கள் சேர்த்தார். கிரன் போலார்ட் 8, ஹெட்மய்ர் 6 ரன்கள் எடுத்தப் போது மழைக் குறுக்கிட்டது. தொடர்ந்த மழைப் பெய்த காரணத்தால் டக்வொர்த் லீவிஸ் முறை அமலுக்கு வந்தது. அப்பொழுது மேற்கு இந்திய தீவுகள் 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு, 98 ரன்கள் எடுத்து இருந்தது. இதனிடையே இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியின் சார்பில், க்ரூனல் பாண்ட்யா 2, சுந்தர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 2-0 என்ற முன்னிலையில், தொடரைக் கைப்பற்றியது. இந்த ஆட்டத்தின் நாயகனாக க்குரூனல் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார்.

HOT NEWS