இந்தியா மேற்கு இந்தியத் தீவுகள் முதல் டெஸ்ட் இரண்டாம் நாள்!

24 August 2019 விளையாட்டு
jadeja.jpg

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரானப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 96.4 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 297 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் லோகேஷ் ராகுல் 44, அஜிங்கியா ரஹானே 81, ஜடேஜா 58 ரன்கள் சேர்த்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் சார்பில், ரோச் 4, கேப்ரியல் 3, சேஷ் 2 மற்றும் ஹோல்டர் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர். பின்னர், தன்னுடைய முதல் இன்னிங்சைத் தொடங்கியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. அந்த அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு, 189 ரன்கள் சேர்த்துள்ளது.

அந்த அணியின் வீரர்கள் பிராத்வோயிட் 14, கேம்ப்பெல் 23, பூரூக்ஸ் 11, பிராவோ 18, ரோஸ்டன் சேஸ் 48, சேய் ஹோப் 24, ஹெட்மெயிர் 35, ஹோல்டர் 10, ரோச் 0 ரன்கள் சேர்த்துள்ளனர்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், பூம்ரா, சமி, மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

HOT NEWS