இந்திய அணி ரன் குவிப்பு! வெ.இண்டீஸ் திணறல்!

31 August 2019 விளையாட்டு
viratkohli2.jpg

pic credit:twitter.com/bcci

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 13, மயங்க் அகர்வால் 55, புஜாரா 6 ரன்கள் எடுத்தனர். கேப்டன் கோலி 163 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ரஹானே 24, விஹாரி 42, ரிஷாப் பண்ட் 27 ரன்கள் சேர்த்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 264 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சார்பில், ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், கார்ன்வால் மற்றும் ரோச் ஆகியோர் தலா, ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

HOT NEWS