இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்! வெற்றியின் விளிம்பில் இந்தியா!

02 September 2019 விளையாட்டு
indiatest.jpg

pic credit:twitter.com/@kkr

423 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் அணிப் போராடி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி, தற்பொழுது மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளது. அங்கு ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, அனைத்துப் போட்டிகளிலும் வென்று கோப்பைகளை வென்றது. இந்நிலையில், டெஸ்ட் போட்டியிலும், முதல் போட்டியை சிரமமின்றி வென்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி, கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி, 416 ரன்கள் குவித்தது. ஹனமா விஹாரி அதிகபட்சமாக 111 ரன்களும், கேப்டன் கோலி 76 ரன்களும், இஷாந்த் ஷர்மா 57 மற்றும் மயங்க் அகர்வால் 55 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் வீரர்கள் ஹெட்மயிர் 34, ஹோல்டர் 18, ரோச் 17, கார்ன்வால் 14 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. ரஹானே 64, விஹாரி 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 467 ரன்கள் முன்னிலைப் பெற்றது இந்திய அணி. 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன், மேற்கு இந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது.

அந்த அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. பிராவோ 18 ரன்களுடனும், பூரூக்ஸ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் 423 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலையில், இந்திய அணி மிகவும் வலுவாக இருக்கின்றது.

HOT NEWS