மழையால் நின்று போன இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி20 போட்டி!

16 September 2019 விளையாட்டு
indvssa.jpg

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பங்குபெற்ற முதல் டி20 போட்டி, மழையின் காரணமாக, நடைபெறவில்லை. இதனால், இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

நேற்று இரவு, மழையின் காரணமாக, ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடரில் பங்குபெறுவதற்காக, இந்தியா வந்துள்ளது தென் ஆப்பிரிக்கா. 2 டி20 போட்டிகள் உட்பட பல போட்டிகளில், அந்த அணி விளையாட உள்ளது.

நேற்று, இரண்டு அணிகளுக்குமிடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாபில் உள்ள, தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது. இதற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. ரசிகர்கள் ஆவலுடன் அமர்ந்திருந்த நிலையில், மழை ஆட்டம் நடைபெறவிடாமல், தடுத்தது. தொடர்ந்து, பல முறை ஆட்டத்தின் நடுவர்கள், மைதானத்தை சோதித்தனர். இருப்பினும், அளவுக்கதிகமாக, மைதானம் ஈரமாக இருந்ததால், ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால், இரு நாட்டு ரசிகர்களும் விரக்தி அடைந்தனர்.

சமூக வலைதளங்களில், தங்களின் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தினர். மேலும், தாங்கள் வாங்கிய, டிக்கெட்டின் பணத்தினைத் திருப்பித் தர வேண்டும் எனவும் கூறினர்.

HOT NEWS