தென் ஆப்பிரிக்கா திணறல்! டிராவினை நோக்கி ஆட்டம்!

05 October 2019 விளையாட்டு
rohitsharmalatest.jpg

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியானது, டிராவாகும் நிலையில் உள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, மூன்று ஒரு நாள் போட்டி, மூன்று டி20 போட்டி மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில், விளையாட உள்ளது.

இதில், மூன்று டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்தன. அதில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றன. இந்நிலையில், அக்டோபர் 2ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்தது. இந்த பெரிய ரன்னிலை நோக்கி, தன்னுடைய முதல் இன்னிங்சினை தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பித்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆப்பிரிக்கா அணி, 118 ஓவரில், 8 விக்கெட் இழப்புக்கு, 385 ரன்கள் குவித்துள்ளது.

அந்த அணியின் எல்கர் 160, டீ காக் 112, டூ பிளசிஸ் 55, பவுமா 18, முத்துசாமி 12 ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மிஞ்சியுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியிடம் இரண்டாவது இன்னிங்ஸ் கையில் உள்ளது. அது மட்டுமின்றி, இந்திய அணியும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட இறங்கினால், கண்டிப்பாக, ஆட்டம் டிரா ஆகும் வாய்ப்புகள் உள்ளன.

HOT NEWS