இந்தியா வங்கதேசம் ஆட்டங்கள்! முழு விவரம்!

31 October 2019 விளையாட்டு
viratkohli1.jpg

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மூன்று டி20 ஆட்டங்களும், இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும், வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சி பெற்று வருகின்றது. இந்த இரு அணிகளும், இந்தியாவில் மூன்று டி20 போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளன.

தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பதால், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. அவருக்குப் பதிலாக, அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ரோகித் ஷர்மாவிற்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவர், மூன்று டி20 போட்டிகளிலும் கேப்டனாக செயல்பட உள்ளார்.

வரும் நவம்பர் 3ம் தேதி முதல் டி20 போட்டியானது டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு ஏழு மணிக்கு நடைபெற உள்ளது. அதே போல், நவம்பர் 7ம் தேதி, இரண்டாவது டி20 போட்டியானது ராஜ்கோட், சௌராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில், இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. அதே போல், கடைசி டி20 போட்டியானது, நவம்பர் 10ம் தேதி இரவு ஏழு மணிக்கு, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதே போல், நவம்பர் 14 முதல் 18ம் தேதி வரை, இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில், முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. அதேல் போல் இரண்டாவது டெஸ்ட் போட்டி இரவு பகல் ஆட்டமாக, நவம்பர் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

HOT NEWS