இந்தியா ரன் குவிப்பு! வங்கதேசம் திணறல்!

15 November 2019 விளையாட்டு
mayankagarwal.jpg

இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, நவம்பர் 14ம் தேதி முதல் இந்தூரில் உள்ள, ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. அந்த அணியின் வீரர்கள் 58.3 வீரர்கள் அனைத்து விக்கெட்டுகளையும், 150 ரன்களை எடுத்தது. ஷத்மான் இஸ்லாம் 24 பந்துகளில் 6 ரன்கள் சேர்த்தார். இம்ருல் கேயெஸ் 6 (18), மொஹமத் மிதுன் 13(36), முஸ்பிகுர் ரஹீம் 43 (105), மஹ்மதுல்லா 10(30), லிட்டன் தாஸ் 21(31), தைஜூல் இஸ்லாம் 1(7), அபு ஜயத் 7(14), எபதாத் ஹோசைன் 2(5) ரன்கள் குவித்தனர்.

இந்திய அணியின் சார்பில், மொஹமத் ஷமி 3 விக்கெட்டுகளையும், இஷாத் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், தங்களுடைய முதல் இன்னிங்சினை இந்திய அணி ஆரம்பித்தது. ஆட்டத்தின் இரண்டாவது நாளான இன்று, 114 ஓவரில் ஆறு விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 330 பந்துகளில், 28 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் உட்பட 243 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரோகித் ஷர்மா 6(14), சத்தீஸ்வர் புஜாரா 54(72), விராட் கோலி 0(2), அஜிங்கியா ரஹானே 86 (172), ரவீந்திரா ஜடேஜா 60(76), விர்திமான் சஹா 12 (11) மற்றும் உமேஷ் யாதவ் 25(10) ரன்கள் குவித்துள்ளனர்.

வங்கதேச அணியின் சார்பில், அபு ஜெயத் 4 விக்கெட்டுகளையும், எபதத் ஹோசைன மற்றும் மெஹதி ஹசன் ஆகியோர், தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். இந்திய அணி, வங்கதேச அணியினை விட 343 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

HOT NEWS