தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீரர்கள் பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது வரை, 85 பதக்கங்களுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது.
நேற்று நடைபெற்ற ஐந்தாவது நாள் போட்டியில், ஒரு தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர் நம் இந்திய வீரர்கள்.
டிரிப்பிள் ஜம்ப் விளையாட்டில், இந்தியாவின் கார்த்திக் உன்னிக்கிரீ தங்கப் பதக்கமும், முகம்மது சலாஹூ வெள்ளிப் பதக்கமும் வென்றனர். அதேப் போல் பெண்கள் பிரிவில், பைரபி ராய் வெண்கலப் பதக்கம் வென்றார். 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ப்ரியா ஹபாதான் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் ஜீவன் ப்ரியானந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதுவரை 38 தங்கம், 32 வெள்ளி மற்றும் 15 வெண்கலத்துடன் மொத்தம் 85 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நேபாளம் இரண்டாம் இடத்திலும், இலங்கை மூன்றாம் இடத்திலும் பதக்கப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.