தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி! மேற்கு இந்தியத் தீவுகள் தோல்வி!

12 December 2019 விளையாட்டு
viratkohlihit.jpg

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்று, தொடரினைக் கைப்பற்றியது.

நேற்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற வெ.இண்டீஸ் அணி பந்து வீச்சினைத் தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் வீரர்கள் ரோகித் ஷர்மா 71 (34 பந்துகள் 6 பவுண்டரி, 5 சிக்சர்), லோகேஷ் ராகுல் 91 (56 பந்துகள் 9 பவுண்டரி, 4 சிக்சர்), ரிஷாப் பண்ட் 0(2), விராட் கோலி 70 (29 பந்துகள் 4 பவுண்டரி, 7 சிக்சர்) அடித்து அசத்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வில்லியம்ஸ், பொலார்டு மற்றும் காட்ரல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 241 என்ற இமாலய இலக்கினை நோக்கி, வெ.இண்டீஸ் அணி களமிறங்கியது.

அந்த அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் சிம்மன்ஸ் 7(11), ப்ரான்டன் கிங் 5 (4), ஹெட்மயர் 41(24), பூரான் 0(1), பொலார்ட் 68(39 பந்துகள், 5 பவுண்டரி, 6 சிக்சர்), ஹோல்டர் 8(5), ஹேடன் வால்ஸ் 11(13), ப்ர்ரே 6(12), வில்லியம்ஸ் 13(7) மற்றும் காட்ரல் 4(4) ரன்கள் எடுத்துத் தோல்வி அடைந்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் தீபக் சாஹர், புவனேஸ்வர் குமார், மொஹமத் சமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிப் பெற்றனர்.

3 போட்டிகள் கொண்டத் தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில், மேற்கு இந்தியத் தீவுகள் அணியினை வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றுத் தொடரினைக் கைப்பற்றியது.

HOT NEWS