இந்தியா வெற்றி! இலங்கையை வீழ்த்தியது!

08 January 2020 விளையாட்டு
viratkohlit20.jpg

நேற்று இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இலங்கை அணியினை வீழ்த்தி, இந்திய அணி வெற்றிப் பெற்றது.

முதல் போட்டி மழையின் காரணமாக நடைபெறாமல் போன நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியானது மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து, இலங்க அணி பேட்டிங் செய்யக் களமிறங்கியது.

அந்த அணியின் வீரர்கள், 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்தனர். தனுஷ்கா 20(21), பெர்னான்டோ 22(16), குஷால் பெரேரா 34(28), ஓசாடோ 10(9), பனூக்கா 9(12), டாஸன் 7(8), தனஞ்செயா 17(13), ஹசரங்கா 16(10), உதானா 1(2), மலிங்கா 0(0) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில், தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், சைனி மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்க்கெட்டுகளையும் வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர், தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி களமிறங்கியது. 17.3 ஓவரில் வெறும் மூன்று விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 144 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ராகுல் 45(32), சிக்கர் தவான் 32(29), ஸ்ரேயஸ் ஐயர் 34(26), விராட் கோலி 30(17) மற்றும் ரிஷாப் பண்ட் 1(1) ரன்கள் குவித்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் ஹசரங்கா இரண்டு விக்கெட்டுகையும், குமாரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

HOT NEWS