டெஸ்ட் சாம்பியன்ஷிப்! இந்தியா முதலிடம்!

16 September 2019 விளையாட்டு
icc-championship.jpg

சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட ஒன்பது அணிகளின் புள்ளி விவரங்களை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தில் உள்ளது.

ஆஷஸ் தொடர் ஆரம்பிக்கும் பொழுதில் இருந்து, இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கும் என, ஐசிசி அறிவித்தது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி, அங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், சிறப்பாக விளையாடி, வெற்றிப் பெற்றது. ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் தலா, இரண்டு போட்டிகளில் வென்றதால், ஆஷஸ் தொடர் சமனில் முடிந்தது.

இந்நிலையில், அதிக வெற்றிகளை இந்திய கிரிக்கெட் அணி பெற்றதால், சாம்பியன்ஷிப் பட்டியலில், முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வெற்றிப் பெற்றது. இதனால், 120 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளில், ஒரு போட்டியில் வென்றும், இலங்கை இரண்டு போட்டிகளில், ஒரு போட்டியினை வென்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.

5 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி, 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் ஒரு போட்டியில டிரா என புள்ளிப் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி, இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி மற்றும் ஒரு டிரா எனப் புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி தோல்விகளை அடைந்ததால் ஆறாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்பதால், முறையே ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாம் இடங்களில் உள்ளன.

இந்த வெற்றித் தொடர்ந்தால், சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் முதல் அணியாக நம் இந்திய அணி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS