ஐபிஎல் டிக்கெட் விவரம் எங்கு எப்படி பெறுவது?

26 February 2020 விளையாட்டு
ipl.jpg

இந்தியன் பிரீமியர் லீக் 2020 போட்டிகள் ஆரம்பமாக, இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளன. இது குறித்த ஆர்வமானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், இந்த போட்டிகளில் விளையாடும் அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பட்டியலும், விளையாடும் போட்டிகள் குறித்த அட்டவணையும் தற்பொழுது வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில், இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட்களை எப்படி பெறுவது எனப் பார்ப்போம்.

ஆன்லைன்

இந்த ஐபிஎல்2020 போட்டிக்கான டிக்கெட்டினை, ஆன்லைனில் எவ்வித கஷ்டமும் இன்றி, எளிதாக பெற இயலும். இன்னும், ஆன்லைனில் டிக்கெட் விற்பனைத் தொடங்கவில்லை. இருப்பினும், பேடிஎம் மற்றும் புக்மைஷோ வலை தளங்களிலேயே, இதற்கான டிக்கெட்கள் விற்கப்பட உள்ளன.

மைதானம்

ஐபிஎல் 2020 போட்டிக்கான டிக்கெட்டுகளை, போட்டி நடைபெறும் மைதானங்களுக்குச் சென்று, நேரடியாகப் பெறலாம். இருப்பினும், அதிகளவிலான கூட்டம், விலை மற்றும் எப்பொழுது டிக்கெட் வழங்குவார்கள் எனத் தெரியாததால், பெரிய அளவிலான சங்கடங்கள் ஏற்படும். எனவே, ஆன்லைனில் டிக்கெட் எடுப்பதே சிறந்தது. அதுமட்டுமின்றி, ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் பொழுது, ஒரு சில ஆஃபர்களும் கிடைக்கும்.

எப்படி இருப்பினும், இந்த டிக்கெட்டின் விலையானது இந்த முறை அதிகளவிலேயே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் எம்ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு 1300 ரூபாய் முதல் 6000 ரூபாய் வரையிலும், பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு 1750 முதல் 35000 வரையிலும், கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு 400 முதல் 4000 வரை டிக்கெட் விலை இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில், 340 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரையிலும், பஞ்சாபில் மொஹாலி மற்றும் தரம்சலா மைதானங்களில் 950 முதல் 8500 ரூபாய் வரையிலும், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு 800 முதல் 8000 ரூபாய் வரையிலும், ராஜஸ்தான் சாவாய் மான்சிங் மைதானத்தில் 500 ரூபாய் முதல், 1500 ரூபாய் வரையிலும், ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு, 500 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரையிலும் டிக்கெட்கள் விற்க்கப்படலாம் என யூகிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS