2022க்குள் அனைத்து கிராமங்களிலும் அதிவிரைவு பிராட்பேண்ட் சேவை! அமைச்சர் தகவல்!

18 December 2019 அரசியல்
mobile3.jpg

வரும் 2022ம் ஆண்டுக்குள், அனைத்து கிராமங்களிலும், அதிவிரைவு பிராட்பேண்ட் சேவை வழங்கப்பட உள்ளது என, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

நேற்று, நடைபெற்ற தேசிய பிராட்பேண்ட் இயக்கத்தினைத் தொடங்கி வைத்த அவர் பேசும் பொழுது, தற்பொழுதுள்ள 5 லட்சத்து 60 ஆயிரம் டவர்களானது, 10 லட்சம் டவர்களாக உயர்த்தப்படும் எனக் குறிப்பிட்டார். நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் கிலோமீட்டருக்கு ஆப்டிகல் பைபர் இணைப்பு உருவாக்கப்பட உள்ளது எனவும் பேசினார்.

இந்தத் திட்டத்திற்காக, மத்திய அரசு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கானப் பங்குகளை விடுவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்து இரண்டரை ஆண்டுக்குள் இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும், அதிவிரைவு பிராட்பேண்ட் சேவை வழங்கபட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

HOT NEWS