சந்தானம் படத்தில் ஹர்பஜன் சிங்! டிக்கிலோனா ஸ்பெஷல்!

15 October 2019 சினிமா
harbajanindikkilona.jpg

சந்தானம் நடிக்கும் டிக்கிலோனாப் படத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், நடிக்க உள்ளார்.

நேற்று மாலை இது குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், நடிகர் சந்தானம் மூன்று வெவ்வேறு கதாப்பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் டிக்கிலோனா.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுவென நடபெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை தேர்வு செய்தும் வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ஹர்பஜன் சிங் இணைந்துள்ளார்.

இது குறித்து, ஹர்பஜன் சிங் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கேஜேஆர்ஸ்டுடியோஸ் மற்றும் சந்தானம் குழுவுக்கு நன்றி. தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித் திரையிலும், இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன் என டிவீட் செய்துள்ளார்.

HOT NEWS