ஜிப்ஸி திரைவிமர்சனம்!

06 March 2020 சினிமா
gypsyreview.jpg

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, நடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாக உள்ளது. கடந்த சில வருடங்களாக, ஜீவா நடித்த எந்தப் படமும் வெற்றிப் பெறவில்லை. இதனால், இந்த முறை ஒரு சென்ஷேனான டாப்பிக்கினைப் பயன்படுத்தி படமாக்கினால், அதன் மூலம் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள் என, இந்தப் படத்தில் நடித்திருக்கின்றார் என்பது மட்டும் தெரிகின்றது.

படத்தில் காதல் ஒரு பாதி, கலவரம் ஒரு பாதியாக இருக்கின்றது. தற்பொழுதுள்ள இந்தியாவில், மதப்பிரச்சனையானது பூதாகரமாகி வருகின்றது. இதனையும், காதலையும் மையமாக வைத்து வெளிவந்துள்ள திரைப்படம் ஜிப்ஸி. இப்படத்தினை, ஜோக்கர் உள்ளிட்ட நல்ல தரமானப் படங்களை இயக்கிய ராஜூமுருகன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

நடிகர் ஜீவா ஒரு கூத்தாடி. தன்னுடைய சே எனும் குதிரையுடன் இணைந்து, ஊர் ஊராக சென்று, அதனை வைத்து வித்தைக் காட்டி பிழைப்பவர். அவருக்கும், இஸ்லாமிய மதத்தினைச் சேர்ந்த நாயகிக்கும் காதல் ஏற்படுகின்றது. இருவரும் திருமணமும் செய்து கொள்கின்றனர். மதப் பிரச்சனைக் காரணமாக, இருவரும் பிரிந்துவிடுகின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதிக் கதை.

யப்பா சாமி! இந்த மாதிரியானப் படங்களை எல்லா மொழியிலும் பார்த்தாச்சு. இன்னும் எதுக்குய்யா, இந்தக் கதையை எடுக்குறீங்கன்னு கேட்கலாம். வேறு வழியில்லை. பணம் கொடுத்து, டிக்கெட் எடுத்தப் பின், நமக்கும் அப்படித் தான் தோன்றியது. படத்தின் காட்சிகள் மிகவும் பசுமையாக உள்ளன. அந்த அளவிற்கு, தன்னுடைய அர்பணிப்பான உழைப்பினை ஒளிப்பதிவாளர் செல்வகுமார். படத்தின் நாயகியாக வரும் நடாஷா சிங், நடப்பில் வெளுத்து வாங்குகின்றார். இவருக்கு, நல்லக் கதைகள் அமைந்தால், சிறப்பான எதிர்காலம் இருக்கும் என்பதில், மாற்றுக் கருத்தில்லை.

படத்தின் பாடல்களை திரையில் காண்பிக்கும் பொழுது, பலரும் கேன்டீன், பாத்ரூம், மற்றும் தம் அடிக்கச் சென்றுவிடுகின்றனர். ஏன்டா, கொல்றீங்கன்னு சந்தோஷ் நாராயணனைக் கேட்கத் தோன்றுகின்றது. இதுக்கு மேல என்னத் சொல்ல!

மொத்தத்தில் ஜிப்ஸி கும்டி டம்டி கும்டி டம்டி!

ரேட்டிங் 1.5

HOT NEWS