ஜெமினி மேன் திரைவிமர்சனம்!

18 October 2019 சினிமா
geminiman.jpg

பல ஆண்டுகள் கழித்து, நடிகர் வில் ஸ்மித் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் ஜெமினி மேன். வில் ஸ்மித் நடித்து இருந்ததால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது என்பதே, நிதர்சனமான உண்மை.

இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் வில் ஸ்மித். உலகின் நம்பர் ஒன் அசாசின் எனப்படும் கொலைகாரன் தான் இந்த ஹென்றி ப்ரோஹென் (வில் ஸ்மித்). அவர் 25 வயதாக இருக்கும் பொழுது, அவருடைய இரத்தத்தினை எடுத்து, அதன் மூலம் ஒரு குளோனை உருவாக்கி, அவரைப் பலி வாங்க அனுப்புகின்றனர். அந்த குளோன் பார்ப்பதற்கு அப்படியே, வில் ஸ்மித்தின் இளைமைக் காலத்தினைப் பார்த்த மாதிரியே உள்ளது. அவன் யார், அவன் வில் ஸ்மித்தைக் கொன்றானா? யார் அந்தப் படத்தின் வில்லன்? இப்படி படத்தின் கதை செல்கின்றது.

படத்தில், பெரிய அளவில் கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், படம் முழுக்க சண்டைகள், வன்முறைகள், கலவரம் என ஒரு விதமாகத் தான் செல்கின்றது. வில் ஸ்மித் ரசிகர்களுக்குக் கூட, இப்படத்தினைப் பிடிக்குமா என்பது சந்தேகம் தான். இந்தப் படத்தினைப் பார்க்கும் பொழுது, பழைய எம்ஜிஆர் படங்களைப் பார்க்கும் ஞாபகம் வருகின்றது. அதே போல, திரைக்கதையும் ஒரு வித சலிப்பினை உருவாக்குகின்றது.

ஹாலிவுட் சினிமாவில், இந்த ஆண்டு பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு படு மோசமாக மொக்கை வாங்கியப் படம் என்றால், அது ஜெமினி மேன் தான்.

ரேட்டி 2/5

HOT NEWS