அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்க புதிய முயற்சி! அறிவிப்பு வெளியானது!

27 November 2019 அரசியல்
sengottaiyan1.jpg

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்கு ஏதுவாக, புதியத் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்திக் குறிப்பும் வெளியாகி உள்ளது.

அதன்படி, இனி அரசுப் பள்ளி மாணவ மற்றும் மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேசும் வகையில் புதிய பயிற்சிக் கையேடுகள் தயாரிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக இரண்டாம் பருவத்திற்கு ஒரு கையேடும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக மூன்று பருவங்களுக்கும் சேர்த்து, மொத்தமாக பாடவாரியாக நான்கு கையேடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

இதனைப் பயன்படுத்தி, உரிய பயிற்சிகளை பள்ளி ஆசிரியர்கள் வழங்க வேண்டும். இது குறித்து, அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்க வேண்டும் என, மாநிலக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள கையேட்டினை விரைவில், தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் வெளியி உள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

HOT NEWS