ஐஎஸ்எஸ்எப் இறுதிப் போட்டியில், தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் வெற்றிப் பெற்றார்.
பெண்களுக்கான பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 20 வயதுடைய இளவேனில் 250.8 புள்ளிகளைப் பெற்றார். இவருடன் போட்டியிட்ட தைவான் நாட்டின் லின் இங்-சின் 250.7 புள்ளிகளைப் பெற்றார். வெறும் 0.1 புள்ளிகளில், நூலிழையில் வெற்றியைப் பதிவு செய்து அசத்திய வளரிவான் தங்கம் வென்றார். மேலும், இவர் பெற்றப் புள்ளிகளானது, ஜூனியர் பெண்கள் பிரிவில் உலக சாதனையாக தற்பொழுது மாறியுள்ளது.
தைவன் வீராங்கை லின் இரண்டாம் இடத்தினையும், ரோமேனியா நாட்டின் லாரா ஜார்ஜூடா 229 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர்.