ஜிம்முக்காக ஸ்டீராயட் எடுப்பவரா நீங்கள்?

10 March 2019 உடல்நலம்
bodybuilder.jpg

சென்ற பகுதியில் புரோட்டீன் பவுடர் எடுப்பதைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பகுதியில் ஸ்டீராய்டுகளை எடுப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஸ்டீராய்டுகளைப் பல விதங்களில் பயன்படுத்துகின்றனர். அவைகளில் பவுடர், ஊசி, மாத்திரை மற்றும் மருந்து என்னும் வடிவங்களே அதிகம். மாத்திரைகள் மற்றும் ஊசிகள் மிகவும் கொடிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. பவுடரைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.

பல விதமான ஸ்டீராய்டு மருந்துகள் உள்ளன. அவைகளில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகள் பின்வருமாறு;

1. DAINABOL
2. TESTOSSTERONE
3. TRENBOLONE
4. ANAVAR
5. D-BAL
6. TESTO MAX
7. TRENOROL
8. ANVAROL

மேலேக் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்டீராய்டு மருந்துகளே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய மருந்துகள் சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, கணையம் செயலிழப்பு, ஆண்மை இழப்பு, மலட்டுத் தன்மை மற்றும் மாரடைப்புப் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. மேலும், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல், அதிகப் பசி போன்ற சிறிய அளவிலானப் பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

முதலில் ஸ்டீராய்டு எடுப்பவர்கள் உடனடியாக அதனை விட்டு விடக் கூடாது. படிப்படியாகவே அதனை விட வேண்டும். ஸ்டீராய்டைப் பயன்படுத்தும் பொழுது அதிகமாக தண்ணீர் குடிக்கமாட்டார்கள். காரணம், ஆணழகன் போட்டிக்கு செல்பவர்கள், தண்ணீர் குடித்தால் உடல் கட்டமைப்பு நன்றாகத் தெரியாது. இதனால், அவர்கள் தண்ணீர் குடிப்பதில்லை. ஆனால், போட்டி முடிந்ததும் தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பர். மேலும், ஸ்டீராய்டையும் படிப்படியாக விட்டு விடுவர். அவ்வாறு, விடும் பொழுது, தினமும் காலையிலும், மாலையிலும் இரண்டு இளநீர் அருந்த வேண்டும்.

அவ்வாறு, அருந்துவதன் மூலம், ஸ்டீராய்டால் உடல் சேர்ந்துள்ள நச்சுப் பொருட்கள் அனைத்தும் சிறுநீர் மற்றும் மலத்தின் மூலம் வெளியேறிவிடும். அதே சமயம், காலையிலும், மாலையிலும் தவறாமல் குளிக்க வேண்டும். அவ்வாறு, குளிப்பதன் மூலம், உடல் உள்ள செல்கள் அனைத்தும் புத்துணர்ச்சி பெறும். உடலில் நீரின் அளவு சமநிலையை அடைய ஆரம்பிக்கும்.

எவ்வளவு தான், இத்தகைய மாற்று வழிகளைச் செய்தாலும், ஸ்டீராய்ட் எடுப்பதன் விளைவைக் குறைக்க முடியுமேத் தவிர, பாதிப்பை முழுமையாக மாற்ற இயலாது.

HOT NEWS