மதுரையில் கள்ள நோட்டு சிக்கியது! கேரளாவில் இருந்து வந்திருக்கலாம் என விசாரணை!

19 November 2019 அரசியல்
2000.jpg

மதுரையில் 7.62 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டு ரூபாய்களை, காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

மதுரை ரயில்நிலையத்தில் நேற்று முன்தினம் (17-11-2019) அன்று, லாரியில் வாட்டர் பாட்டில் ஏற்றி வந்தது ஒரு லாரி. அந்த லாரியினை பூபதி என்பவர் ஓட்டி வந்துள்ளார். அந்த லாரியினை நிறுத்தி, அதிலுள்ள வாட்டர் கேன் பாட்டில்களை இறக்கிக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்பொழுது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த மர்ம நபர், கையில் வைத்திருந்த பார்சலை அந்த லாரியில் போட்டுவிட்டு வேகமாகப் பறந்துவிட்டார். இதனால், சற்று அச்சமடைந்த ஓட்டுநர் பூபதி, மெதுவாக சென்று அந்த பார்சலைப் பிரித்துப் பார்த்துள்ளார். அதில், சுமார், 381 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளன. இதன் மொத்த மதிப்பு, 7.62 லட்ச ரூபாயாகும். இதனையடுத்து, மதுரை திலகர் திடல் காவல் நிலையத்திற்கு ஓட்டுநர் புகார் அளித்துள்ளார்.

அந்த பார்சலைப் பிரித்துப் பார்த்த பொழுது, அந்த பணப் பண்டல் மலையாள செய்தித் தாள் மூலம், சுற்றப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து, பணத்தினை வீசியவர் கேரளாவில் இருந்து இதனைக் கொண்டு வந்து இருக்கலாம் அல்லது கேரளாவினைச் சேர்ந்தவராக இருக்கலாம் என விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS