டிக்டாக்கினை பெண்கள் பயனப்டுத்தக் கூடாது! பிரேமலதா வேண்டுகோள்!

09 March 2020 அரசியல்
dmdkpremalatha.jpg

பெண்கள் அதிகமாக டிக்டாக் ஆப்பினைப் பயன்படுத்துகின்றனர் எனவும், அதனைப் பெண்கள் பயன்படுத்தக் கூடாது எனவும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று, திருப்பரங்குன்றத்தில், தேமுதிக சார்பில் மகளிர் தின சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய பிரேமலதா விஜயகாந்த், தாய் மீனாட்சியம்மனின் அருளால், கேப்டன் 50% உடல்நலம் தேறிவிட்டார் எனவும், விரைவில் பொதுக்கூட்டங்களில் பேசுவார் எனவும் கூறினார்.

மேலும் பேசுகையில், தேமுதிக விரைவில் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் எனவும், அப்பொழுது அமைச்சரவை முதல் அனைத்திலும், 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். பெண்கள், அதிகமாக டிக்டாக் மோகத்திற்கு அடிமையாகின்றனர் எனவும், அதனைப் பயன்படுத்தக் கூடாது எனவும், வேண்டுகோள் விடுத்தார்.

ஜாதி மற்றும் மதத்தினை வைத்து, ஒரு சிலர் அரசியல் செய்கின்றனர். ஆனால், கொரோனா வைரஸானது, சாதி மற்றும் மதம் பார்க்காமல், அனைவரிடத்திலும் பரவி வருகின்றது எனக் கூறினார். விரைவில் கேப்டன் பேசுவார் எனவும் அவர் கூறினார். இந்தக் கூட்டத்திற்கு, தேமுதிகவினர் திரண்டு வந்து கேப்டனைப் பார்த்தனர்.

HOT NEWS