தோள்பட்டை வலியால் ஆட்டத்தைக் கைவிட்ட ஜோகோவிச்!

02 September 2019 விளையாட்டு
djokovic5.jpg

நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் ஒன் போட்டியான ஜோகோவிச் காயம் காரணமாக, போட்டியில் இருந்து விலகி அதிர்ச்சி அளித்தார். இதனால், அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஞாயிறு இரவு நடைபெற்ற அமெரிக்க டென்னிஸ் போட்டியில், உலகின் நன்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச்சும், வாவ்ரிங்காவும் மோதினர். இதில் 6-4,7-5,2-1 என்ற செட் கணக்கில் ஆட்டம் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று இடது கை தோள்பட்டையில் ஏற்பட்ட வலியின் காரணமாக, நோவாக் ஜோகோவிட்ச்சால் தொடர்ந்து ஆட்டத்தினைத் தொடர இயலவில்லை.

இதன் காரணமாக, அவர் பாதியிலேயே போட்டியில் இருந்து விலகுவதாக ஒப்புக் கொண்டார். இதனால், அவர் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத டென்னிஸ் ரசிகர்கள், ஜோகோவிச்சை திட்டித் தீர்த்தனர்.

HOT NEWS