ஜப்பானில் 3,500 கப்பலில் கொரோனா வைரஸ் இல்லை! ஜப்பான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

04 February 2020 அரசியல்
diamondprincess.jpg

ஜப்பான் கடற்கரையில், தற்பொழுது 3500 பயணிகளுடன் டைமண்ட் பிரின்ஸ் க்ரூஸ் சொகுசுக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் உள்ள மூதாட்டிக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அந்தக் கப்பலில் உள்ள அனைவரையும் கடுமையாக சோதித்தனர்.

கடந்த ஜனவரி 25ம் தேதி அன்று, ஜப்பான் நாட்டின் ஹாங்காங் பகுதிக்கு, இந்தக் கப்பல் வந்தது. அந்தக் கப்பலில் இருப்பவர்களை, ஜப்பான் அரசாங்கம் உள்ளே வர அனுமதிக்கவில்லை. அந்தக் கப்பலில், இருந்த 80 வயதுடைய மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்தக் கப்பலில் உள்ள அனைத்து ஊழியர்களையும், சோதனை செய்தனர்.

அந்த சோதனையில், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்ற முடிவு கிடைத்தது. இந்நிலையில், மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அதில், யாருக்கும் எவ்வித கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அந்தக் கப்பலானது, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நகர அனுமதிக்கப்பட உள்ளது. அதே போல், அதிலுள்ள பயணிகள், ஜப்பானில் நடமாடவும் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது.

HOT NEWS