தோனி பேன்ஸ் vs தோனி ஹேட்டர்ஸ்

28 June 2019 விளையாட்டு
flyingdhoni.jpg

நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியின் பொழுது, தோனி ஒரு கேட்ச் பிடித்தார். அவ்வளவு தான். தோனி பேன்ஸ்க்கு முளைத்தது பாருங்கள் ரெண்டு கொம்பு. அப்பொழுது யாரும் தோனிக்கு எதிராக எதையும் சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை. ஒரு வேளை யாராவது பதிவிட்டிருந்தால், அவ்வளவு தான். அவர்களை உண்டு, இல்லை என ஒரு கைப் பார்த்து இருப்பார்கள்.

உலகம் முழுக்க, நேற்று நடந்தப் போட்டியின் பொழுது, தோனியின் பேட்டிங்கையும், அவருடைய விக்கெட் கீப்பர் திறைமையையும் புகழ்ந்து, டிவிட்டரில் உலகளவில் டிரெண்டிங்கே செய்துவிட்டனர்.

போதாகுறைக்கு, விராட் கோலி வேறு தல தோனியைப் புகழ்ந்துவிட்டார். இது எரிந்த நெருப்பில், எண்ணெயையை ஊற்றியது போல, மேலும் ரசிகர்களை ஆனந்த வெறி கொள்ளச் செய்துவிட்டது.

கடைசி ஒவரில் அவர் ரன் குவிப்பில் ஈடுபட்டதற்கு ஐசிசி மட்டுமல்ல, உலகின் பல முன்னணி நிறுவனங்களுமே தோனியைப் புகழ்ந்து தள்ளிவிட்டன. அவர்களே அப்படி செய்கையில், அவருடைய ரசிகர்களைப் பற்றிச் சொல்லனுமா என்ன?

தோனியின் ரசிகர்கள் நேற்று அவரைப் பற்றிப் புகழ்ந்து வெளியிட்ட டீவிட்டுகளில், சிறந்தவை உங்களுக்காக!

















HOT NEWS