நான் ஏன் டைவ் அடிக்கவில்லை என கேட்டுக் கொண்டே இருக்கின்றேன்! மனம் திறந்த தோனி!

14 January 2020 விளையாட்டு
msdhonirunout1.jpg

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், முக்கியமான அரையிறுதி ஆட்டத்தின் பொழுது, எதிர்பாராத விதமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி, ரன் அவுட்டாகி உலகக் கோப்பை கனவினைத் தகர்த்தார். இதனால், பலரும் விரக்தி அடைந்தனர்.

இந்த போட்டிக்குப் பிறகு, தற்பொழுது வரை எந்தப் போட்டியிலும் தோனி விளையாடவில்லை. தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகின்றார். அவர் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் பொழுது, தன்னுடைய மனம் திறந்து பதில் கூறினார். அதில், நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நான் ரன் அவுட் ஆகிவிட்டேன். உண்மையில், நான் டைவ் ஏன் அடிக்கவில்லை என, என்னுள் நானே கேட்டுக் கொண்டு இருக்கின்றேன். தன்னுடைய முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரன் அவுட் ஆனேன். தற்பொழுது நியூசிலாந்து போட்டியிலும் ரன் அவுட் ஆகியுள்ளேன் எனவும் அவர் கூறினார்.

இது தோனியின் ரசிகர்களை, நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், ஒரு சிலர் இனி தோனி விளையாடமாட்டார் என்பதையே சூசகமாகக் கூறுகின்றார் என சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS