தோனியை கௌரவித்த கிரிக்கெட் வாரியம்! எப்படின்னு தெரியுமா?

29 September 2019 விளையாட்டு
dhoniform.jpg

இந்தியாவிற்கு, தோனியால் கிடைக்காத பெருமை என ஒன்றும் இல்லை. அந்த அளவிற்கு, தன்னால் ஒரு கிரிக்கெட் வீரராக என்ன செய்ய இயலுமோ, அதனை செய்துவிட்டார். போதாத குறைக்கு, இராணுவத்திற்கும் செல்கின்றார், வருகின்றார்.

இந்நிலையில், அவரைக் கௌரவிக்கும் பொருட்டு, அவரை வாழ்நாள் உறுப்பினராக அறிவிப்பதற்கு, ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அங்கு மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தல் முடிந்த உடன், புதியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பர். பின்னர், அந்தத் தலைவர், தோனியை வாழ்நாள் கிரிக்கெட் சங்க உறுப்பினராக, அறிவிக்க உள்ளதாக கருதப்படுகின்றது.

தற்பொழுது, ஜார்கண்ட் மாநிலத்தின், கௌரவ உறுப்பினராக தோனி உள்ளார். இவர் கிரிக்கெட் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ள நிலையில், அவர் பாஜகவில் விரைவில் சேர்வார் என்கின்றனர் ஒரு சில பாஜகவினர்.

HOT NEWS