சென்னை வந்த தோனி! சிஎஸ்கே பயிற்சி விரைவில் ஆரம்பம்!

02 March 2020 விளையாட்டு
dhonichennai.jpg

பல மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் ஒதுங்கியிருந்த தல தோனி, இப்பொழுது சென்னைக்கு பயிற்சிக்காக வந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியானது, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின், அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. அதில், முக்கியமானத் தருணத்தில் மகேந்திர சிங் தோனி, ரன் அவுட் ஆகி ஏமாற்றம் தந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் கிரிக்கெட் விளையாடுவதைத் தவிர்த்து வந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் இந்திய இராணுவத்திற்கு சென்று சிறிது காலம் பயிற்சி பெற்றார். பின்னர், ரஞ்சிக் கோப்பை அணிகளுடன் இணைந்து பயிற்சி பெற்றார். தற்பொழுது, ஐபிஎல் டி20 போட்டிகள் தொடங்க உள்ளன. இவைகளில் பங்கேற்பதற்காக, பலரும் தங்களுடைய அணிக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், வீரருமான தல தோனி, நேற்று இரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். அவருக்கு, ரசிகர்கள் தங்களுடைய உற்சாக வரவேற்பினை அளித்தனர். அவர் தற்பொழுது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்ள உள்ளார். மேலும், அவர் இந்த போட்டிகளைத் தொடர்ந்து, இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS