தனுஷ் கடந்து வந்த பாதை!

29 July 2019 சினிமா
dhanush-karthicksubburaj.jpg

நடிகர் தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு. இவர் 28-07-1983ம் ஆண்டு பிறந்தார். இவருடைய அண்ணன் இயக்குநர் செல்வராகவன். இவருடைய தந்தை கஸ்தூரி ராஜா தாயார் விஜயலட்சுமி.

இளமைக் காலத்திலேயே சினிமாத் துறைக்குள் வந்துவிட்டார் தனுஷ். இவருடைய தந்தையின் இயக்கத்தில், தனுஷ் நடித்த முதல் திரைப்பட்ம் துள்ளுவதோ இளமை. இப்படத்தில் நடித்த தனுஷிற்கு, பல கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. பின் அவருடைய அண்ணன் திரு. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான, காதல் கொண்டேன் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

அதன் பின் இன்று வரை, இவர் தன்னுடைய நடிப்பினை ஒவ்வொரு படத்திற்கும் வளர்த்துக் கொண்டே அவரும், வளர்ந்து வருகிறார். பாடகர், எழுத்தாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல முகங்களைக் கொண்டவர்.

தமிழில் மட்டுமல்ல, ஹிந்தியிலும் இவர் நடித்த திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. இவரை இணையத்தின் சூப்பர் ஸ்டார் எனக் கூற வேண்டும். அந்த அளவிற்கு, அவர் பிரபலம். அவர் பாடிய ஓய் திஸ் கொலவெறிடி பாடல் இன்று வரை, இணையத்தின் ஹிட் பாடல் எனக் கூறலாம். தற்பொழுது ரௌடி பேபி பாடல், முதன் முறையாக தமிழ் சினிமாவின் பல கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் புரிந்துள்ளது.

பல தோல்விகள், பல வெற்றிகள் பல சாதனைகள் என தனுஷ் தாண்டி வந்த விஷயங்கள் பல. இருப்பினும், தனுஷிடம் எவ்வித கர்வமோ அல்லது ஆனவமோ என எதையும் நம்மால் அவரிடம் பார்க்க முடியாது. அதுவே அவரின் மிகப் பெரிய பலமாகும். முதல் படத்தில் எந்த உடல் அமைப்போடு இருந்தாரோ, அதே உடலமைப்போடு இன்றும் இருக்கிறார். தனுஷின் வெற்றிக்கு அவர் மட்டுமல்ல, அவருடைய ரசிகர்களே மிகப் பெரிய துணையாக இருக்கின்றனர். அதற்கு தனுஷ் கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

HOT NEWS