சிறப்பு புலனாய்வு விசாரணையில் சின்னமயானந்தா! பாலியல் பலாத்காரம் குறித்த வழக்கில் கிடுக்குப்பிடி!

11 September 2019 அரசியல்
chinmayanand.jpg

சின்னமயானந்தா என்றப் பெயரை நாம் ஏற்கனவே கேள்விப்ப்பட்டு இருப்போம். மிகவும் பிரசித்திப் பெற்ற பெயர். சென்ற நாடாளுமன்ற அவையில், இவர் உறுப்பினராகவும் இருந்தவர். 72 வயதாகும் இவர், பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் ஆவார். இவர், உத்திரப் பிரதேச மாநிலத்தில், பல கல்வி நிறுவனங்களையும், ஷாஜகான்பூரில் ஆசிரமும் வைத்து தன்னுடைய அறக்கட்டளை மூலம், பல நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

இவர் மீது அவருடைய சட்டக் கல்லூரியில் படித்த பெண் மாணவி ஒருவர் பாலியல் புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவிக்குப் பல கொலை மிரட்டல்களும், அவர் மீது அபாண்டமானப் புகார்களும் சுமத்தப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், அந்த மாணவி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதில் சாமியார் சின்னமயானந்தா என்னை கற்பழித்தார் எனப் புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து, சின்னமயானந்தா மீது, ஆள்கடத்தல், கற்பழிப்பு உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது போலீஸ்.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் படி, ஐஜி நவீன் அரோரா தலைமையில், சிறப்புக் குழுவானது தற்பொழுது, சின்னமயானந்தாவை விசாரித்து வருகின்றது. மேலும், அவருடையக் கல்வி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் முதல் மாணவிகள் என யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதே சமயம், பாதிக்கப்பட்ட மாணவியிருந்த ஹாஸ்டலிலும், தீவி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

HOT NEWS