இனி வீட்டில் இருந்த படியே, பட்டாவினை மாற்றலாம்! தமிழக அரசு புதுமை!

12 February 2020 அரசியல்
draughtland.jpg

இனி ஒருவர் சொத்தினை, மற்றவருக்கு மாற்றுவதற்கு தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டிலேயே, மாற்றும் வசதியினை தமிழக அரசு செய்துள்ளது.

இதற்கு முன் இணையத்தில், பட்டா மாற்றும் வசதி இருந்தாலும், அதனால் பெரிய அளவில் பயனில்லாமல் இருந்தது. இதனால், மேலும் தாசில்தார் அலுவலகத்திற்கே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதன் காரணமாக, அலுவலகங்களில் வேலைப்பழு அதிகரித்தது. இதனைக் கருத்தில் கொண்டு, புதிதாக மீண்டும் இணையத்திலேயே பட்டா மாற்றத்தினை எளிதாக்கி உள்ளது தமிழக அரசு.

இனி, பட்டாவினை மாற்றம் செய்ய விரும்புபவர்கள், தாசில்தார் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, தன்னுடைய வீட்டில் இருந்தே, இணையத்தின் மூலம், தங்களுடையப் பட்டாவினை மாற்றிக் கொள்ளலாம். அதில், கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியானப் பதிலை பூர்த்தி செய்தால் போதும். மீதியுள்ள விஷயங்கள் எவ்வித சிக்கலும் இன்றி, எளிதாக நடைபெறும்.

பட்டா மாற்றம் குறித்த தகவலானது, மாற்றியவர்களின் மொபைல் எண்ணிற்கு வந்துவிடும். இந்த வசதியினை http://ese-rv-i-ces.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.

HOT NEWS