மைக்ரோசாப்ட்ல் இருந்து பில்கேட்ஸ் விலகல்! அடுத்தது யார்?

18 March 2020 தொழில்நுட்பம்
bilgatessecurity.jpg

விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து, அதன் நிறுவனர் பில்கேட்ஸ் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உலகின் 2வது மிகப் பெரிய பணக்காரராக இருக்கும், 64 வயதுடைய பில்கேட்ஸ் தற்பொழுது, தன்னுடைய சொந்தப் பணிகளைப் பார்க்க உள்ளதாகவும், அதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து அவர் விலக உள்ளதாகவும் செய்திகள் உள்ளன. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில், அந்த நிறுவனத்தின் சிஈஓ ஆக இருக்கும் இந்தியாவின் சத்ய நாதெல்லா கடிதம் ஒன்றில் குறிப்பிட்டு உள்ளார்.

அவருடையக் கடிதத்தில், விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து பில்கேட்ஸ் விலகுவார் எனவும், இருப்பினும் அவருடைய ஆலோசனைகளும், கொள்கைகளும் பின்பற்றப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவை இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். பில்கேட்ஸூடன் பணியாற்றியதற்கும், நண்பனாக இருப்பதற்கும் மகிழ்ச்சி கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் நிறுவனத்தினை விட்டு விலகியப் போதிலும், தொழில்நுட்ப ஆலோசகராக அவர் தொடர்ந்து தன்னுடைய வேலையினைச் செய்வார் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அவர் விலகுவதால், அவருடையப் பதவியினை வேறொருவர் கவனிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், பெர்க்சியர் ஹாத்வே என்ற நிறுவனத்தில் இருந்தும், பில்கேட்ஸ் விலகுகின்றார்.

இதனால் அவரால் காலியாகும் பதவியினை, முன்னாள் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சிஈஓவாக இருந்த கென்னீத் சென்னால்ட் நிரப்ப உள்ளார். அவர் பேஸ்புக் இயக்குநர் குழுவில் இருந்து விலகிவிட்டதாக, பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது தன்னுடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அறிவித்துள்ளது.

100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புள்ள பில்கேட்ஸ், தற்பொழுது பிட்காயின், பிளாக் செயின் மற்றும் மருத்துவம் உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS