வித்தியாசமான சொகுசுக் கப்பல் வாங்கும் பில்கேட்ஸ்!

12 February 2020 தொழில்நுட்பம்
billgatesyatcht.jpg

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான பில்ஹேட்ஸ், தற்பொழுது சொகுசுக் கப்பல் ஒன்றினை வாங்கியுள்ளார்.

அப்படி என்ன இந்தக் கப்பலில் விஷேசம் உள்ளது எனக் கேட்கலாம். இவர் இந்தக் கப்பலை வாங்கியதற்கு காரணம் உண்டு. உலக அளவில், சுகாதாரப் பாதுகாப்பு, இயற்கை வாழ்வியல், ஆரோக்கியமான வாழ்விற்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு, பில்கேட்ஸ்ம் அவருடைய அறக்கட்டளையும், அதிக அளவில் முக்கியத்துவம் அளித்து வருகின்றது.

இந்நிலையில், ஒரு தனியார் சொகுசுக் கப்பல் ஒன்றினை வாங்கியுள்ளார். இந்தக் கப்பல், முற்றிலும், சுகாதார முறையில் இயங்கக் கூடியதாகும். இந்த சொகுசுக் கப்பலால், எவ்வித பாதிப்பும் இயற்கைக்கு ஏற்படாது. அப்படியொன்றைத் தான் தற்பொழுது வாங்கியுள்ளார்.

சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தக் கப்பலானது, திரவ ஹைட்ரஜன் மூலம் இயங்கக் கூடியது. இந்த கப்பலினை சினோட் என்ற, டச்சு நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது மிகவும் அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய கப்பல் ஆகும். சுமார் 112 மீட்டர் நீளமுடைய இந்த சொகுசுக் கப்பலானது, 17 நாட்டிகல் மைல் வேகத்தில் இயங்கக் கூடியது. இந்த கப்பலில் ஐந்து மாடிகள் உள்ளன. பல அறைகள் உள்ளன. நீச்சல் குளம் முதல் பல வசதிகள், இந்த கப்பலில் உள்ளன.

இந்த கப்பலானது, தற்பொழுது பயன்பாட்டிற்கு வரவில்லை. திரவ ஹைட்ரஜன் எரிபொருளினை, மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதில்லை. இதனால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதால், இது வருங்காலத்தில் பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS