பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் புதிய சாதனை!

02 September 2019 சினிமா
verithanam.jpg

நேற்று நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தில் இருந்து, வெறித்தனம் என்ற இரண்டாவது பாடல் வெளியானது.

இப்பாடல் ஏற்கனவே, இணையத்தில் லீக்காகி இருந்தது. இருப்பினும், இது லீக்காகவில்லை என, தயாரிப்பு நிறுவனம் மறுப்புத் தெரிவித்தது. இந்நிலையில், நேற்று இப்பாடல் மாலை ஆறு மணிக்கு வெளியானது. வெளியானது முதல் தற்பொழுது வரை, பல சாதனைகளைக் குறுகிய நேரத்திற்குள் செய்துள்ளது.

இதுவரை, தமிழ் சினிமாவில் எந்தத் திரைப்படமும் செய்யாத செயலை இப்படத்தின் பாடல் செய்துள்ளது. வெறித்தனம் என்றப் பாடலை முதன் முறையாக, நடிகர் விஜய் ஏஆர்ரகுமான் இசையில் பாடியுள்ளார். எனவே, இப்பாட்டிற்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று இப்பாடல் வெளியாவதற்கு முன்பிருந்தே, இப்படத்தின் பாடலை விஜயின் தீவிர ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இப்பாடல் ஒரு மணி நேரத்தில் 1.8 மில்லியன் பார்வையாளர்களையும், 3,87,000 லைக்குகளையும் அள்ளியது. அதே போல், 2 மணி நேரத்தில் 2.5 மில்லியன் பார்வையாளர்களையும் 4,85,000 லைக்குகளையும் அள்ளியது. 3 மணி நேரத்தில் 2.9 மில்லியன் பார்வையாளர்களையும் 2540,000 லைக்குகளையும், 4 மணி நேரத்தில் 3.2 மில்லியன் பார்வையாளர்களையம், 5,70,000 லைக்குகளையும் அள்ளிக் குவித்துள்ளது. 5 மணி நேரத்தில் 3.6 மில்லியன் பார்வையாளர்களையும், 6,10,000 லைக்குகளையும் அள்ளியுள்ளது. இதுவரை எவ்விதப் படத்தின் பாடலும், இத்தகையச் சாதனையை செய்ததில்லை.

அதே சமயம், இப்படத்தின் பாடல் உரிமையை வாங்கியுள்ள சோனி நிறுவனம், அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, சர்வதேச அளவில், அவர்களுடைய வலைப்பக்கத்தில், பிகில் படத்தின் வெறித்தனம் பாடல், உலக பாடல்கள் வரிசையில் 6 வது இடத்தில் உள்ளது. இதனை தற்பொழுது விஜய் ரசிகர்கள் மீண்டும் டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

HOT NEWS