பிகில் ட்ரெய்லர் வரலாற்று சாதனை படைத்தது!

13 October 2019 சினிமா
bigiltrailer1.jpg

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட, பிகில் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் பிகில். இத்திரைப்படம் வரும், தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இதனால், இத்திரைப்படத்தின் மீது, பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் கடந்த மாதம் வெளியாகி, ஹிட்டான நிலையில், இப்படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் எப்பொழுது வெளியாகும் என்ற கேள்வியை, விஜயின் ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர். அவர்களுக்கு விருந்து வைக்கும் விதத்தில், நேற்று மாலை ஆறு மணிக்கு பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர், நல்ல வரவேற்பினை தற்பொழுது பெற்றுள்ளது. தற்பொழுது வரை, இப்படத்தின் ட்ரெய்லர் ஒன்றரை கோடி பார்வையாளர்களையும், 15 லட்சம் லைக்குகளையும் பெற்று அசத்தியுள்ளது. இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென் இந்தியாவின் மாபெரும் சாதனையாகவேப் பார்க்கப்படுகின்றது.

இதனை விஜயின் ரசிகர்கள் தற்பொழுது, சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS