பிகில் திரைவிமர்சனம்!

25 October 2019 சினிமா
bigilreview.jpg

தன் பிள்ளை சிறந்த விளையாட்டு வீரனாக வந்து, தன் மக்களின் வளர்ச்சிக்கு வழி காட்டுவான் என தந்தை ராயப்பனின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பது தான், பிகில் திரைப்படத்தின் கதை!

இதில், தந்தை ராயப்பன் மற்றும் பிகில் என அழைக்கப்படும் மைக்கேல் கதாப்பாத்திரங்களில், நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தில், பெண்கள் கால்பந்து அணிக்கு கோச்சாக நடிகர் கதிர் நடித்துள்ளார். அவருக்கு ஒரு சமயத்தில் காயம் ஏற்பட, அவருக்குப் பதிலாக அவருடைய நண்பரான பிகில் பயிற்சி அளிக்கின்றார். அதிலிருந்து நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் படமாக்கி இருக்கின்றார் இயக்குநர் அட்லி. படம் முழுக்க, ஜாலியாக வந்து, நம்ம ரசிக்க வைக்கும் விஜய், ஆக்ஷன் காட்சிகளில் நம்மை கைதட்ட வைக்கின்றார். பொதுவாக, விஜய் படங்களில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்ற விஷயம் என்றால், அது பாடல்.

பாடல்கள் விஜய் படங்களில், சிறப்பாக அமைந்துவிட்டால் போதும். விஜயின் நடனத்தை விட, விஜய் ரசிகர்களின் நடனத்தினைக் காண்பதற்கே, திரையறங்கிற்குச் செல்லலாம். அதனை, இப்படத்தில் நம்மால் காண இயலவில்லை. வெறித்தனம் பாடலின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும், மொத்த வித்தையையும் இறக்கியிருக்கின்றார் இசைப்புயல். பின்னணி இசையினை குறைகூறும் தகுதி யாருக்கும் இல்லை. அந்த அளவிற்கு செதுக்கியிருக்கிறார் ரகுமான். என்ன இருந்தாலும், ஒரு மாஸ் நாயகனுக்கு ஆடுவதற்கு ஏற்றாற் போல ஒரு பாடல் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று.

படத்தின் ஒளிப்பதிவு மிக அருமை என்றுக் கூறலாம். ஒவ்வொரு காட்சியிலும், ஒரு வித குளிர்ந்த தன்மையை கண்களுக்கு அளிக்கின்றார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. குறிப்பாக, மைதானத்தில் விளையாடும் அனைத்துக் காட்சிகளும், நம்மை ரசிக்க வைக்கின்றன.

பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாப்பாத்திரம் தான், நம்முடைய நாயகன். தன் பகுதியில் வாழும் மக்கள் வளர வேண்டும் என நினைக்கும் மனிதராக இருந்தாலும், சாதாரண மனிதராக அவர் இல்லை. ஒரு மாஸான ஆளாக வருகின்றார். சண்டை செய்கின்றார், பாசத்தைப் பொழிகின்றார். அனைவரும் வளர வேண்டும் என நினைக்கின்றார். பிகில், விளையாடுவதற்குப் பிரச்சனை வரும் பொழுது, ஒரு தந்தையாக அவர் எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தாலும், அதனை முகத்தில் காட்டாத விஜயின் நடிப்புப் பாராட்டத்தக்கது.

படத்தில் நயன்தாரா நடித்திருக்கின்றார். பொதுவாக, அட்லிப் படங்களில், நடிகைகள் பாடலுக்கு ஆடுவதற்கும், சென்டிமென்ட் காட்சிகளுக்குமேப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அதனை, இப்படத்திலும் மறக்காமல் செய்துள்ளார். அதே போல், அட்லீ படம் என்றால், காப்பி அடிப்பது, கதைகளைத் திருடுவது எனப் பல சர்ச்சைகள் உண்டு. இப்படத்திலும், அதற்கு குறையில்லை. ஹாலிவுட்டில் வெளியான கோல், ஹிந்தியில் எளியான ஷாரூக் கான் திரைப்படமான ஜக்குதே இந்தியா படங்களின் காட்சிகளை காண முடிகின்றது. ஒரு வேளை இதுதான் எக்ஸ்பெக்ட் தி அன்எக்ஸ்பெக்டட்டோ!

படத்தில் கால்பந்து வீராங்கணைகளாக நடித்திருக்கும் நடிகைகள் அனைவருமே, தன்னுடையக் கதாப்பாத்திரத்தினை சிறப்பாக செய்துள்ளனர். எது எப்படியோ, அட்லி தன் வேலையை சிறப்பாக செய்துவிட்டார்.

மொத்தத்தில் பிகில் விளம்பரம் தான் எல்லாம்!

ரேட்டிங் 2.9

HOT NEWS