பிகில் இசை வெளியீட்டு விழா! விஜயின் மாஸ் பேச்சு!

20 September 2019 சினிமா
bigil.jpg

மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையில், நடிகர் விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான பிகில் படத்தின் பால் வெளியீட்டு விழா நேற்று மாலை, சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்பொழுது மேடையில் பேசிய விஜய் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், ஒரு முறை எம்ஜிரிடம், அவருடைய அமைச்சர் ஒருவர், கலைஞரைப் பற்றி தவறாகப் பேசி உள்ளார்.

உடனேயே அந்த அமைச்சரை, காரில் இருந்து வெளியேற்றினார் எம்ஜிஆர். எதிரிகளாக இருந்தாலும் நாம் மதிக்க வேண்டும். என் ரசிகர்கள் எவ்வளவோ ஆசைகளோட, கனவோட, சிரமப்பட்டு பேனர் வைக்கின்றார்கள். அதை கிழிச்சா அவங்களுக்கு கோபம் வருவது நியாயம் தான். அதற்காக கிழித்தவர்கள் மீது கை வக்காதீர்கள்.

இது என்னுடைய வேண்டுகோள். பேனரால், இறந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ்டேக் போடுங்க. முதல்ல சமூகப் பிரச்சனைகள்ல கவனம் செலுத்துங்க.

விளையாட்டில் மேம்படனும்னா, அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க. விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில், யாரை கைது பண்ணனுமோ அவங்களை விட்றாங்க. பிரிண்டர்ஸ பிடிக்கிறாங்க. யார் மேல கோவ படணுமோ அவங்கள விட்டுட்டு லாரி டிரைவரை பிடிக்கிறாங்க. இதை எல்லாம் ட்விட்டரில் டிரெண்ட் பன்னுங்க. எவன எங்க உட்கார வெக்கனுமோ, அவன் அங்க உட்கார வெச்சா எல்லாம் நல்லா இருக்கும்.

இவருடையப் பேச்சிற்கு விஜயின் ரசிகர்கள், தங்களுடைய கரகோஷத்தை எழுப்பி, ஆதரவு தெரிவித்தனர். மேலும், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன், ரசிகர்கள் கூட்டத்தால் திக்கு முக்காடியது அப்பகுதி. அதனை சமாளிக்க போலீசார் லேசாக, தடியடி நடத்திக் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.

HOT NEWS